QTS Family Badminton Tournament

அன்புள்ள கத்தர் தமிழர் சங்க உறுப்பினர்களே,

 

வணக்கம்.

 

நமது சங்க உறுப்பினர்களின் இறகு பந்து திறமையை வெளிக்கொணரவும் , ஊக்குவிக்கவும் “கத்தர் தமிழர் சங்கத்தின் குடும்ப இறகு பந்து போட்டி- 2026 வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, அல் உக்கயர், பீட்டா கேம்ப்ரிட்ஜ் பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முறை குடும்பமாக கலந்துகொள்ளும் வாய்ப்பை கத்தர் தமிழர் சங்கம் முன்னெடுத்துள்ளது. 

 

போட்டி பிரிவுகள்:

ஆடவர் ஒற்றையர் (18 வயதுக்கு மேல்) 

ஆடவர் இரட்டையர் (18 வயதுக்கு மேல்) 

அப்பா & மகள் இரட்டையர்

அப்பா & மகன் இரட்டையர்

சகோதரர்கள்  இரட்டையர்

சகோதரன் & சகோதரி இரட்டையர்

 

மகளிர் ஒற்றையர் (18 வயதுக்கு மேல்) 

மகளிர் இரட்டையர் (18 வயதுக்கு மேல்) 

அம்மா & மகள் இரட்டையர்

அம்மா & மகன் இரட்டையர்

சகோதரிகள் இரட்டையர்

கணவன் & மனைவி இரட்டையர்

 

குறிப்பு: இப்போட்டி கத்தர் தமிழர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே. உறுப்பினரல்லாதவர்கள் உறுப்பினராகி போட்டியில் கலந்து கொள்ளலாம்.

 

இப்போட்டியை பற்றிய மேலும் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள விளையாட்டு துறை செயலாளர் திரு. முருகேசன் வெள்ளத்துரை – 30347772 அல்லது  திரு. மோகனசுந்தரம் – 33138139 அல்லது திரு. மனோஜ் – 33428574 ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.