Today: December 2, 2023 4:55 am
QATAR TAMIZHAR SANGAM - Associate Organisation of Indian Cultural Center, Under the aegis of Indian Embassy, Qatar
Today: December 2, 2023 4:55 am
QATAR TAMIZHAR SANGAM - Associate Organisation of Indian Cultural Center, Under the aegis of Indian Embassy, Qatar

QTS Event Videos

தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பறை மற்றும் தற்காப்புக் கலையான சிலம்பத்தை, காண்போரை பிரமிக்க வைக்குமளவிற்கு அந்த கலையின் மாண்பினை உலக அரங்கில் பறைசாற்றிய நம் பங்கேற்பாளர்கள் அனைவரையும் கத்தர் தமிழர் சங்கம் சார்பாக பாரட்டுவதில் பெருமைக்கொள்கிறோம்.

உங்கள் அனைவரின் உழைப்பிற்க்கும் பயிற்சிக்கும் கிடைத்த அங்கீகாரம் தான் Indian Ambassador Dr. Deepak Mittal, Qatari dignitaries மற்றும் மற்ற அனைவரிடமும் நேற்று நமக்கு கிடைத்த பாராட்டுக்கள்.

நம் இந்திய மற்றும் தமிழர்களின் பெருமையையும் பண்பாட்டின் சிறப்பையும் மிகவும் பொறுப்புடனும் நேர்த்தியுடனும் அரங்கேற்றிய நாகம்-16 சிலம்பக்குழுவின் ஆசிரியர் திரு பிரபு மற்றும் குழுவினருக்கும் துள்ளல் பறையிசை குழுவின் ஆசிரியர் திரு நிர்மல் மற்றும் குழுவினருக்கும் எங்களின் நன்றிகளும் பாராட்டுகளும்.

நம் கலைகளின் மாண்பு எள்ளவிற்க்கும் குறைந்தவிடக்கூடாது என்பதில் மிகவும் சிரத்தை எடுத்து அனைவரையும் ஒருங்கிணைத்து வழி நடத்திய நண்பர் திரு இராமசெல்வம் அவர்களுக்கும், நமக்கு இந்த வாய்ப்பை நல்கிய இந்திய விளையாட்டு சம்மேளனத்தின் (ISC) தலைவர் Dr. Mohan Thomas மற்றும் பொதுச்செயலாளர் நமது அன்பிற்கு இனிய நண்பர் திரு சீனிவாசன் அவர்களுக்கு கத்தர் தமிழர் சங்கத்தின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இனி வரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்பாக பங்குபெற கத்தர் தமிழர் சங்கம் என்றென்றும் உங்களுடன் துணை நிற்கும் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்களும் நன்றிகளும்.