வணக்கம்.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவாக கத்தரில் உள்ள இந்தியப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பேச்சுப் போட்டி ஒன்றை 03/11/2023 அன்று ICC, Ashoka Hall – அரங்கில் நமது சங்கம் பெருமையுடன் ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டிக்கான தகுதிச்சுற்று (Preliminary rounds) 27/10/2023 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 14 இந்திய பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தத்தம் பேச்சு திறமையை வெளிப்படுத்தவுள்ளனர்.
“மாணவர்களே வருங்கால இந்தியா” என்ற டாக்டர். கலாம் அவர்களது வழி நடக்கும் விதமாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில், தாங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கலந்துகொண்டு எழுச்சியுடன் தமிழில் பேசும் மாணவர்களை ஊக்கப்படுத்த மாறும், விழாவை சிறப்பிக்கும் மாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Event location: ICC – Indian Cultural Centre, Ashoka Hall
Date: 03/11/2023
Time: 9 am to 2 pm