ஆசிய கோப்பை கால்பந்து (Qatar AFC 2023 ) போட்டிகளை கொண்டாடும் விதமாக கத்தர் அரசு, ஆசிய நாடுகளின் அரங்குகளை Lusail பொலிவார்டில் அமைத்ததுள்ளது. அங்கு அமைந்திருக்கும் இந்திய அரங்கில், தமிழர்களின் கலைகளை பறைசாற்ற இந்திய தூதரக்கத்தின் கீழ் இயங்கிவரும் கத்தர் தமிழர் சங்கம், இந்திய கலாச்சார மையத்தின் துணையோடு 28.1.24 ஞாயிற்றுகிழமை அன்று நமது பாரம்பரிய கலைகளை உலக அரங்கில் மிளிரும் விதமாக கலைநிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்தியது.
பறையிசை முழங்க, பொய்க்கால்குதிரை ஆட்டம், தெருக்கூத்தும், சிலம்பமும். மக்களை பரவசப்படுத்தியது பழங்குடி நடன நிகழ்ச்சியை மக்கள் கண்டு ரசித்தனர்.
நமது கருப்பு கவுனி , மூங்கில் அரிசி, சாமை போன்ற சிறுதானியங்களில் சமைத்த உணவுகளை சுவைத்தும் அதன் நன்மைகளை பற்றி அறிந்தும் மக்கள் வியந்தனர்.
வெளிநாட்டு பார்வையாளர்கள் பலர் சேலைகள், பட்டு பாவாடைகள், வேட்டி சட்டை போன்ற நமது பாரம்பரிய உடைகளை உடுத்தி மகிழ்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
நமது உள் அரங்கு விளையாட்டுகளான பாண்டி விளையாட்டு, கழங்கு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து பலரும் அவர்களது இளமை காலத்திற்கு சென்றதை காண முடிந்தது.
தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமான வள்ளுவரின் சிலைகளும், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் குறித்து பல புத்தகங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
தமிழரின் பெருமைகள் ஆயிரம் உண்டு, அதில் சிறு துளிகளை சேர்த்து செய்த காணொளியை மக்கள் பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC), மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் கத்தர் தமிழர் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. நன்றி.