கத்தர் தமிழர் சங்கத்தின் இலவச ICBF ஆயுள் காப்பீடு திட்டம்
அன்பு உறுப்பினர்களே,
 
வணக்கம்.
 

கத்தர் தமிழர் சங்கத்தின் அடிப்படை நோக்கத்தில் ஒன்று கத்தர் வாழ் தமிழர்களுக்கான சமூக சேவை என்பது தாங்கள் அறிந்ததே.

கத்தரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள் / மீனவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து தங்கள் குடும்பத்தினர்க்கு வாழ்வாதாரத்திற்கான தேவையை நிறைவேற்றி வருகிறார்கள். இவர்கள் தான் அவர்கள் குடும்பத்தின் அச்சாணி என்பதை கத்தர் தமிழர் சங்கம் முழுவதுமாக உணர்ந்து அவர்களுக்காக இந்திய தூதரகத்தின் கீழ் இயங்கி வரும் ICBF (Indian Community Benevolent forum) அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீடு திட்டத்தை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தகுதியுள்ள 200 தொழிலாளர் மற்றும்  மீனவர்களுக்கு இந்த ICBF ஆயுள் காப்பீடு திட்டத்தை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

ஒவ்வொரு கத்தர் தமிழர் சங்க உறுப்பினரும் தகுதியுள்ள தொழிலாளர் அல்லது மீனவர் ஒருவரை இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற அறிமுகம் செய்யலாம். இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட ICBF life insurance விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் / மீனவர்கள் மட்டுமே QTS ஆல் வழங்கப்படும் இலவச ஆயுள் காப்பீடு  திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை கத்தர் தமிழர் சங்கத்தின் சமூக சேவைக்குழுவின் (Benevolent Committee) உறுப்பினர்கள் சரிபார்த்து, தொழிலாளர்களின் / மீனவர்களின் வயது, சம்பளம், வேலையின் தன்மை மற்றும் இதர காரணங்களின் அடிப்படையில்  தகுதியான தொழிலாளர் / மீனவர்களை தெரிவு செய்வார்கள்.

இத்திட்டத்தின் மூலம் நீங்கள் சில தொழிலாளர்கள் அல்லது மீனவர்களுக்கு உதவ முன்வந்தால் (giving the life insurance  scheme to the deserved low income employee or fishermen on behalf of you) கத்தர் தமிழர் சங்கம் அதை தலை வணங்கி வரவேற்கிறது. உங்கள் விருப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது திரு. பிரம்மகுமார் (Mobile number: 30290715) Benevolent Secretary அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு திரு. பிரம்மகுமார் (Mobile number: 30290715) Benevolent Secretary அல்லது திரு பாலசுப்ரமணி (Mobile number: 55989578) Joint Secretary அவர்களின் எண்ணிற்கு அழைத்து கேட்டு தெரிந்துக்கொள்லளாம்.

மக்கள் சேவையில் உங்களுடன் என்றும் கத்தர் தமிழர் சங்கம் துணை நிற்கும்.

கத்தர் தமிழர் சங்கத்தின் உதவும் கரங்கள்

கடந்த பல ஆண்டுகளாக கத்தரில் மீன்பிடி தொழில் செய்து வந்து கொண்டிருந்த நம்முடைய மீனவ சகோதரர் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அவருடைய அடையாள அட்டை காலாவதியாகியதாலும் ஊருக்கு செல்லமுடியாமல் தவித்து வந்தார். அவர் கத்தர் தமிழர் சங்கத்தின் உதவியை நாடியதும், துரிதமாக செயல்பட்டு கத்தர் தமிழர் சங்க தலைவர், மனித நேய சேவை செயலர் மற்றும் துணை குழு உறுப்பினர் என அனைவரும் இந்திய தூதரகத்தின் உதவியோடும் மற்றும் கத்தர் தமிழர் சங்கத்தின் சார்பில் பயணச்சீட்டையும் வழங்கி, அவர் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிகழ்விற்கு உதவிய அனைவருக்கும் கத்தர் தமிழர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.